வருமான வரித் தாக்கல்: பழவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?
2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத்தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.
கடந்த 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்குத் தாக்கல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே, தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்வது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மிகவும் அவசியம்.
வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு மிக அவசியமான ஆவணங்களில் ஒன்று ஃபார்ம்-16. இது நிறுவனம், ஊழியருக்கு வழங்குகிறது. இந்த படிவத்தில் ஒரு ஊழியர் பெறும் வருமானம், பிடித்தம் செய்யப்பட்ட வரி என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்த படிவம் 16தான், ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்த வரியை வருமான வரித் துறைக்கு செலுத்தியதற்கான சாட்சி. அதுபோல, ஒரு ஊழியருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அடிப்படை ஆவணம்.