பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்...
அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்
மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டட வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடா்ந்து, இரண்டாம் நாளாக சனிக்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். லஷ்மி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. குணசுந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா். மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.