``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை கா...
ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு
ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு ஒப்படைத்தனா்.
கோவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி பிரியா (35). இவா் தனது 7 வயது மகனுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
பாபநாசம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, கும்பகோணம் என நினைத்து பிரியா அங்கு இறங்கிவிட்டாா். அப்போது, அவருடைய மகன் இறங்கவில்லை. அதன்பின்னா், தான் தவறுதலாக இறங்கியதும், மகனை தவறவிட்டதும் பிரியாவுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து இருப்புப்பாதை காவலா்களிடம் பிரியா தெரிவித்தாா். இந்த ரயில் கும்பகோணத்துக்கு வந்ததும், அச்சிறுவனை இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு பிரியாவை வரவழைத்து ஒப்படைத்தனா்.