செய்திகள் :

``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!

post image

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்திருக்கிறார்.

நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இது குறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், "மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அனைத்தையும் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்தை இயக்க வேண்டியிருக்கிறது.

ஆம்புலன்ஸ்

5 - ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பார்வை பறிபோகக் கூடாது என்பது மட்டுமே குறியாக இருந்தது. வழியில் அந்தந்த ஊரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுக்க போக்குவரத்து காவலர்கள் ஒத்துழைப்புடன் 3 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை அடைய‌ முடிந்தது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மணிப்பூர் சோகம்: `படிப்படியாக நாங்கள் மறக்கப்பட்டோம்' - 2 ஆண்டுகள் முடிந்தும் தொடரும் துயரம்!

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே உள்நாட்டுக் கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டு... மேலும் பார்க்க

``நாட்டுக்காக தற்கொலை வெடிகுண்டோடு பாகிஸ்தானுக்குச் செல்வேன்'' - கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் நடத்திய தீவிரவா... மேலும் பார்க்க

``இந்திய வரலாற்றில் முதல் ஓ.பி.சி பிரதமர் நரேந்திர மோடிதான்..'' - இராம ஸ்ரீநிவாசன்

"முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையவும் தான் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட உள்ளது." என்று பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு தேர்தல்; திமுக, அதிமுக, பாஜக நடத்திய கூட்டங்கள்.. பரபரக்கும் அரசியல் நகர்வுகள்!

நேற்று அதிமுக செயற்குழு கூட்டம், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பாஜகவின் மையக்குழு கூட்டம் என்று இப்போதே தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டை பற்றிக் கொண்டுவிட்டது. பிற கட்சிகளுமே ஆலோசனைகள், க... மேலும் பார்க்க

``40 ஆண்டுகள் விசுவாசமா இருக்கும் எனக்கு அந்த பதவி வேண்டாம்..'' - அதிருப்தியில் தேமுதிக நிர்வாகி

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30, 2025), தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபகாரனை நியமித்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா. இதனையடுத்து சிலர் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அந... மேலும் பார்க்க

``நம்முடைய பலமே இது தான்; அமைச்சர்கள் சென்னையில் இருக்காதீர்கள்'' - திமுக கூட்டத்தில் ஸ்டாலின்

தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன. இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவாட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர்... மேலும் பார்க்க