செய்திகள் :

`நோய் தீரவில்லை..' - மதச் சடங்கை கடைப்பிடித்து உயிரிழந்த ஐ.டி தம்பதியின் 3 வயது மகள்

post image

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் சந்தாரா என்ற ஒரு மத சடங்கை கடைப்பிடிப்பது வழக்கம். வயதானவர்கள் இது போன்ற மதசடங்கை கடைப்பிடித்து எதுவும் சாப்பிடாமல் இருந்து உயிரை துறப்பது வழக்கம்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அது போன்று எதுவும் சாப்பிடாமல் இருந்து தனது உயிரை துறந்திருக்கிறார். போபாலை சேர்ந்த பியூஸ் மற்றும் வர்ஷா ஜெயின் தம்பதி ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள்.

இவர்களுக்கு வியானா ஜெயின் என்ற 3 வயது மகள் இருந்தார். ஒரே மகள் என்பதால் மகள் மீது பியூஸ் தம்பதி மிகவும் அன்பு வைத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக வியானாவிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. சிறுமியை மும்பைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டனர். பல லட்சம் செலவும் செய்தும் சிறுமியின் உடல்நிலையின் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக நிலைமை மேலும் மோசமடைந்தது.

சாதனை சான்றிதழ்

இதையடுத்து பியூஸ் தம்பதியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்த நிலையில் இந்தூரில் உள்ள ஜெயின் மத முனிவர் ராஜேஷ் முனி மகாராஜ் என்பவரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து அங்கு ராஜேஷ் முனி சிறுமியின் பெற்றோர் சம்மதத்துடன் சந்தாரா சடங்கை சிறுமிக்கு செய்தார். இதில் சிறுமி 10 நிமிடத்தில் இறந்து போனார்.

இது குறித்து சிறுமியின் தாயாரா வர்ஷா ஜெயின் கூறுகையில், ''குருதேவ் எங்களுக்கு அனைத்தையும் விளக்கினார். எங்களது சம்மதத்துடன் ஜெயின் மத முறைப்படி, சந்தாரா செய்யப்பட்டது. 10 நிமிடத்தில் வியானா இறந்து போனாள்'' என்றார்.

வியானா ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் சந்தாராவின் குறுகிய நேரத்தில் இறந்து போனார்.

சிறுமியின் தந்தை பியூஸ் இது குறித்து கூறுகையில், ''நாங்கள் சந்தாரா செய்யவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் சிறுமியின் நிலை மோசமாக இருந்ததால் அதனை செய்யுமாறு குருதேவ் அறிவுறுத்தினார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டோம்'' என்றார்.

இளம் வயதில் சந்தாரா எடுத்த நபர் என்ற பெறுமை வியானாவிற்கு கிடைத்திருக்கிறது. அதோடு உலக சாதனை புத்தகமான கோல்டன் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து ராஜேஷ் முனி கூறுகையில், ''3வயது சிறுமி வியானா 50 வயது நபர் மதம் குறித்து தெரிந்து கொண்ட அளவுக்கு மதத்தை புரிந்து வைத்திருந்தார்'' என்றார்.

ராஜேஷ் முனி இது வரை 100 பேருக்கு சந்தாரா செய்து வைத்துள்ளார். ஜெயின் மதத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது.

இதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், ஜெயின் மதத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் காரணமாக, 'ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை' ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் `ஜெயின் மத சடங்கு நிகழ்வுக்கு' அனுமதி அளித்தது.

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார்.போப் அவர்களின் உடல் ரோம... மேலும் பார்க்க

மும்பை: நீதிமன்ற உத்தரவுக்கு முன் ஜெயின் கோயிலை இடித்த மாநகராட்சி; மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பை விலே பார்லே பகுதியில் கடந்த வாரம் 35 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.அதுவும் அக்கோயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. 90 ஆண்டு பழமையான பங்களாவிற்குள் இருந்த... மேலும் பார்க்க

Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் யார் தெரியுமா?

நீண்ட நாள்களாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். இந்த நிலையில், சில நாள்களாகவே பேசப்பட்டு வந்த புதிய போப் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: மோடி, ஸ்டாலின், விஜய்... - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

உலகம் முழுவதுமுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்ஸிஸ் தனது 88வது வயதில் மரணமடைந்துள்ளார்.நீண்டநாட்களாக நிமோனியா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டுவந்த போப் பி... மேலும் பார்க்க