செய்திகள் :

கோடைக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?

post image

கோடைக்காலத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

சிறிய துணிக்கடை முதல் பெரிய மின்னணு பொருள்கள், கார் விற்பனை நிலையங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோடைக்கால சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் கோடைக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதிமுதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது. குறிப்பாக இதில் ஸ்மார்ட்போன்களின் விலை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அமேசான் வழங்கியுள்ள சிறப்பு சலுகையில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ், ஐகியூ, ஸியோமி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு விலை குறைந்துள்ளது, பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொண்டால் விலை எவ்வளவு மாறுபடும், சலுகை கால நிர்ணயம், வங்கி தரப்பிலான சலுகைகள் என்னன்ன? என்பன உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும், பழையவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தக் கோடை சிறப்புச் சலுகை மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம்.

குறிப்பாக, பட்ஜெட் இருக்குமானால், பலரின் கனவாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 1,34,999. ஆனால் கோடைக்கால சிறப்புச் சலுகையில் 84,999-க்கு அமேசான் தளத்தில் வாங்கலாம்.

சிறந்த சலுகைகளையுடைய ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?

சாம்சங் கேலக்ஸி எஸ் 24

  • 6.2 அங்குல அமோலிட் திரை

  • ஸைனோஸ் 2400 புராசஸர்

  • 4000 mAh பேட்டரி திறன், 25W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 1,34,999

  • சலுகை விலை : ரூ. 84,999

ஐ-போன் 15

  • 6.1 அங்குல ஒஎல்இடி திரை

  • ஆப்பிள் ஏ16 பையோனிக் புராசஸர்

  • 3349 mAh பேட்டரி திறன் 15W வையர்லஸ் சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை ரூ. 69,900

  • சலுகை விலை ரூ. 57,749

ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி

  • 6.78 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8 3ஆம் தலைமுரை புராசஸர்

  • 6000 mAh பேட்டரி, 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 44,999

  • சலுகை விலை : ரூ. 39,999

ஐகியூ நியோ 10ஆர்

  • 6.78 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர்

  • 6400 mAh பேட்டரி திறன் 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 31,999

  • சலுகை விலை : ரூ. 24,999

ஸியோமி 14 சிவி

  • 6.55 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர்

  • 4700 mAh பேட்டரி திறன், 67W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 54,999

  • சலுகை விலை : ரூ. 32,999

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4

  • 6.67 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 695 5ஆம் தலைமுறை புராசஸர்

  • 5110 mAh பேட்டரி திறன், 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 20,999

  • சலுகை விலை : ரூ. 15,999

சாம்சங் கேலக்ஸி எம் 35

  • 6.6 அங்குல அமோலிட் திரை

  • ஸைனோஸ் 1380 புராசஸர்

  • 6000 mAh பேட்டரி திறன், 25W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 24,499

  • சலுகை விலை : ரூ. 13,999

ரியல்மீ நார்சோ 80எக்ஸ்

  • 6.72 அங்குல எல்சிடி திரை

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6100 புராசஸர்

  • 6000 mAh பேட்டரி திறன், 45W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 15,999

  • சலுகை விலை : ரூ. 11,999

டென்னோ பாப் 9

  • 6.6 அங்குல எல்சிடி திரை

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர்

  • 5000 mAh பேட்டரி திறன், 18W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 8,499

  • சலுகை விலை : ரூ. 5,490

அமேசான் இணைய விற்பனைத் தளம் வழங்கியுள்ள இந்த சலுகையுடன் மேலும் சில சலுகையைச் சேர்த்து பயன்பெற இதனுடன் தொடர்புடைய இன்ன பிற சலுகைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வங்கிகள் வழங்கும் சலுகைகள்...

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களை அமேசான் தளத்தில் வாங்கும்போது வங்கிகள் வழங்கும் உடனடிச் சலுகைகளை ஸ்மார்ட்போன்களின் விலையின் கீழேயே வழங்கப்பட்டிருக்கும். அதில் தெரிந்துகொள்ளலாம்.

பழைய ஸ்மார்ட்போன்கள் மாற்றம்

உங்களிடமுள்ள பழைய ஸ்மார்ட்போன்களை அமேசானிலேயே விற்று, புதிய ஸ்மார்ட்போனை பெறுவதன் மூலம் கூடுதல் சலுகைகளைப் பெற முடியும்.

அமேசானில் கோடை கால சலுகைகளைப் பொறுத்தவரையில் எச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் 10% தள்ளுபடி உண்டு. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு உடையவர்களுக்கு 5% தள்ளுபடி உண்டு.

கால நிர்ணய சலுகை

அமேசான் நிறுவனம் ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் (உதாரணம்: இரவு 8 - 9 மணி ) சிறப்புச் சலுகையில் உடனடி விற்பனையை அறிவிக்கும். அதில் ஒருசில பிராண்டுகளுக்கு சில நிமிடங்களுக்கு மட்டும் கூடுதல் சலுகை இருக்கும். இதனை அமேசான் விளம்பரங்கள் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம்.

சலுகை கூப்பன்கள்

இணைய விற்பனை தளத்தில் ஒருசில பொருள்களுக்கு கூப்பன்களை அமேசான் அறிவித்திருக்கும். பொருள்களை வாங்கும்போது கூப்பன்கள் தானியங்கியாக விலையில் பிரதிபலிக்காது. அதனை அறிந்து, கூப்பன்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதல் சலுகைகளைப் பெறலாம்.

மற்ற விற்பனை தளங்கள்

அமேசான் விற்பனை தளத்தின் பொருள்களை மற்ற இணைய விற்பனை தளங்களான ஃபிளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்வது லாபம் அளிக்கலாம். குறைந்த விலை எதில் உள்ளதோ, அதனைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

அமேசான் பிரைம்

அமேசான் இணைய விற்பனை செயலியில் பிரைம் உறுப்பினராக இருந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே இந்த சலுகைகள் பொருந்தும். அதனால், சலுகை முடிவதற்குள் பொருள்களைத் தேர்வு செய்து பயன்பெறலாம்.

இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.ஏப்ரல் 22ஆ... மேலும் பார்க்க

என்ன, ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா?

வங்கிகளில் கணக்குத் தொடங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்தே ஆக வேண்டும் என்ற விதிமுறை வந்துவிட்டது.ஆனால், சில வங்கிகள் ஸீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க... மேலும் பார்க்க

சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம்... பாகிஸ்தானை எதிர்க்கும் ஆயுதமாவது எப்படி?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மூன்று போர்களின்போதுகூட, மனிதாபிமான அடிப்படையில் நிறுத்தப்படாத சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.எல்... மேலும் பார்க்க

பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

பஹல்காமில் தாக்குதல் நடத்தியது யார்? பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு இடையே, பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்கப் போவது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.ஜம... மேலும் பார்க்க

உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது த... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸின் இளமைக்கால காதல்!

உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் செல்வேன் என போப் பிரான்சிஸ் தனது காதலிக்காக இளமைக் காலத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காதல், நிராகரிப்பில் முடிந்ததாலோ என்னவோ? கடிதத்தில் அவர் எ... மேலும் பார்க்க