3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்
Sree leela: "இதயத்தைக் கொள்ளை கொள்ளும் தருணம்" - மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த நடிகை ஶ்ரீ லீலா
நடிகை ஶ்ரீ லீலா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளுக்கும் பேன் இந்தியன் நட்சத்திரமாகப் பயணித்து வருகிறார்.
தற்போது அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்.
அந்தக் குழந்தையின் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "வீட்டிற்குப் புதிய வருகை. இது இதயத்தைக் கொள்ளைக்கொள்ளும் தருணம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை ஶ்ரீ லீலா குழந்தைகள் மீத அளப்பரிய பிரியம் கொண்டவர்.
அவ்வப்போது சமூக வலைத்தள பக்கங்களில் குழந்தைகளுடன் ரீல்ஸ்களைப் பதிவிடுவார்.
23 வயதான ஶ்ரீ லீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை இது.
ஆம், ஏற்கெனவே தன்னுடைய 21-வது வயதிலேயே இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தார் ஶ்ரீ லீலா.
2022-ம் ஆண்டு குரு - சோபிதா என்கிற இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஶ்ரீ லீலா தத்தெடுத்திருந்தார்.
ஒரு ஆசிரமத்திற்குச் செல்கையில் இந்த இரண்டு குழந்தைகளையும் தத்தெடுத்திருந்தார்.
சினிமா கரியரைப் பார்த்துக் கொண்டு இப்படியான தன்னுடைய சில பர்சனல் கமிட்மென்ட்களையும் கவனித்து வருகிறார் ஶ்ரீ லீலா.

ஶ்ரீ லீலா தற்போது பாலிவுட்டில் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைத் தாண்டி தமிழில், சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், ரவி தேஜாவுடன் இவர் நடித்திருக்கும் 'மாஸ் ஜத்தரா' திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...