Tamannaah: `மில்கி பியூடி' என அழைக்கப்படுவது குறித்து ஓப்பனாக பேசிய தமன்னா!
பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை தமன்னா பாட்டியாவின் ஓடெல்லா 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்துக்கான புரோமோஷன்களில் கலந்துகொண்ட தமன்னா, தனது கரியர் குறித்தும் பல ஆண்டுகளாக பொதுதளத்தில் வைக்கப்பட்ட எதிர்மறை விஷயங்களை எப்படி கையாண்டார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
குறிப்பாக மில்கி மியூடி என அடையாளப்படுத்தப்படுவது குறித்தும், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக நடிக்கப்போவதில்லை என்றும் பேசியுள்ளார்.

முன்னதாக ஓடெல்லா திரைப்பட இயக்குநரிடம் மில்கி பியூடியில் எப்படி சிவ சக்தியைக் கண்டீர்கள் என ஒரு பத்திரிகையாளர் கேட்டதும், அதற்கு தமன்னா பதிலடி கொடுத்ததும் வைரலானது.
சமீபத்தில், தமன்னா தனது தோற்றத்துக்காக அங்கீகரிக்கப்படுவது அவரை மட்டுப்படுத்துகிறதா எனக் கேட்கப்பட்டது.
Tamannaah பேசியது என்ன?
அதற்கு அவர், "நான் இந்த இடத்தில் பாதிக்கப்பட்டவரைப் போல நடந்துகொண்டு, நான் அழகாக இருப்பதால் மட்டுமே எனக்கு வாய்ப்பு வரவில்லை எனக் கூறப்போவது கிடையாது. அது எனக்கு அன்னியமாக இருக்கும்.

நாம் காட்சி ஊடகத்தில் பணியாற்றுகிறோம். இங்கே பொருள்கள் அதற்கான அழகியலுடன் இருக்க வேண்டும். அதற்காகத்தான் பெரிதும் முயற்சிக்கிறோம். ஆனால் கதை சொல்ல மற்ற வழிகளும் உள்ளன." எனப் பேசினார்.
மில்கி பியூடி என அழைக்கப்படுவது குறித்து, "இது என் ரசிகர்களிடம் இருந்து தொடங்கியது என நினைக்கிறேன். அவர்கள் மிகவும் குறைவாக இதைப் பயன்படுத்தி என்னை அடையாளப்படுத்தியபோது இனிமையாக இருந்தது. பின்னால் மீடியா இதைப் பயன்படுத்தத் தொடங்கியதும் பரவிவிட்டது. ஆனால் இது என்னை ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை." எனப் பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
