செய்திகள் :

Nani: ``என் மகனுடன் ஜெர்சி படத்தைப் பார்த்த அந்த அனுபவம்..!'' - நெகிழும் நானி

post image

"எனக்கு போ கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வாழ்க்கைக்கான பாடத்தை எல்லாம் கற்றுக் கொண்டது போவிடமிருந்துதான். நான் சோர்வாக உணரும்போதெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் வசனங்களை நினைத்துக்கொள்வேன். போவினால் டிராகன் வாரியர் ஆக முடியும் என்றால் நம் யாராலும் என்ன வேண்டுமானாலும் ஆக முடியும்." என அறையில் இடம்பெற்றிருந்த குங்-ஃபூ பாண்டா கதாபாத்திரமான போவின் ஓவியம் குறித்து பகிர்ந்து பேச ஆரம்பித்தார் நேச்சுரல் ஸ்டார் நானி.

Actor Nani
Actor Nani

சமீபத்தில் இவரின் தயாரிப்பில் வெளியான `கோர்ட் :ஸ்டேட் vs நோபடி' என்ற திரைப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்றைப் பெற்றது . மேலும் இவர் தயாரித்து நடித்திருக்கும் `ஹிட்-3' திரைப்படம் வரும் மே-1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பேட்டி அளித்துள்ளார் நடிகர் நானி .

அதில் பேசிய அவர், "வால் போஸ்டர் சினிமா தயாரித்த அனைத்துப் படங்களும் ஹிட்தான். அதில் இந்த `கோர்ட் :ஸ்டேட் vs நோபடி' திரைப்படம்தான் சிறிய பட்ஜெட், ஆனால் மிகப்பெரிய ஹிட்! அப்போதெல்லாம் தூதர்ஷன் மட்டும்தான் இருக்கும், அதில் ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டும் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும். பிளாக் & வைட் படம் என்றால் பழைய படம் ,கலர் படம் என்றால் புதியது, அவ்வளவு தான் தெரியும். இடையில் படங்களின் விளம்பரங்கள், டிரைலர் என எதுவும் இருக்காது. நான் என் பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் சத்யம் என்று ஒரு திரையங்கம் உள்ளது.

Actor Nani
Actor Nani

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு புதிய திரைப்படம் அங்கு திரையிடுவார்கள். அதில் என்னை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவது வால் போஸ்டர்கள்தான். அதிலிருந்து இன்று வரை எனக்கு வால்போஸ்டர்கள் பார்க்கும் போது ஒரு ஆனந்தம் வரும். டிஜிட்டல் போஸ்டர்களில் அது வருவதில்லை. என்றாவது ஒரு நாள் நானும் சினிமாவில் வர வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு காரணம் இந்த வால்போஸ்டர்கள்தான். அதனால் தான் என் தயாரிப்பு நிறுவனத்திற்கு `வால் போஸ்டர் சினிமா' என்று பெயரிட்டுள்ளேன்.

நிறைய பேரால் கதை எழுத முடியும். ஆனால் அனைவராலும் அதை படமாக கற்பனை செய்து பார்க்க இயலாது. எழுதிய கதையை படமாக கற்பனை செய்பவர்கள்தான் இயக்குநராக முடியும். கதையாக பார்ப்பவர்களுக்குள் ஒரு எழுத்தாளார்தான் இருப்பார். இந்த தலைமுறையில் நான் தயாரிப்பாளராக அல்லது நடிகராக பல புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளேன். தோல்வி திரைப்படம் அளித்த இயக்குநரைக்கூட நான் தேர்வு செய்துள்ளேன்.

Actor Nani
Actor Nani

ஏன் என பலரும் என்னை குழப்பியும் உள்ளனர். அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நான் இருந்தாலும், பிற இயக்குநர்கள் இருந்தாலும், தோல்வி படம் அளித்தவர்களை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனெனில் நான் அவர்கள் சொன்ன கதையையும், அவர்கள் சொன்ன விதத்தையும் நம்புகிறேன். அதில் எந்த ஃபார்முலாவும் இல்லை. அவர்களால் முடியும் என நான் முழுதாக நம்புகிறேன். `HIT-3' அதிக வன்முறைக் கொண்ட ஒரு திரைப்படம்.

க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பாணியில் ஆரம்பிக்கும் திரைப்படம், போகப் போக எக்ஸ்டிராக்ஷன் பாணியில் செல்லும். அந்தத் திரைப்படத்தை பற்றி ஓரு வார்த்தையில் கூறிவிட முடியாது. ஆனால் இதுதான் `ஹிட்' திரைப்பட வரிசையில் மிகவும் மாஸான திரைப்படம் என்று நிச்சயமாக சொல்ல முடியும். இதற்கு முன்பு வந்த படங்களில் யார் என்ற கேள்வி இருக்கும், ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ இறுதியில் யார் கொலைகாரன் என்பது தெரிய வரும்.

நானி
நானி

ஆனால் `ஹிட்-3'-ல் யார் என்பது கேள்வி இல்லை, எப்படி என்பதுதான் கேள்வி. அது சுவாரஸ்யமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்." என்றவர், ``என் திரைப்படங்களை நான் பார்த்ததில் எனக்கு மோசமான அனுபவம் என்று எதுவும் இல்லை. சரியா போகாத திரைப்படங்களைக் கூட நான் ரசித்துதான் பார்த்தேன், எனக்கு அந்த அனுபவம் எப்போதும் ஸ்பெஷல். எனது சிறந்த அனுபவம் என்றால் `ஜெர்சி' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ்.

800 பேர் அந்தத் திரையரங்கில் அமரலாம். நான் எனது மகனோடு சென்றிருந்தேன், எனக்கு அடுத்த இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு அப்போது ஆறு வயது. அதற்கு முன்பு அவன் `ஜெர்சி' படத்தைப் பார்த்தது இல்லை. படம் நெடுகவே ஆரவாரத்துடனே ரசிகர்கள் படம் பார்த்தனர்.படத்தில் இடைவேளைக்கு முன்பு மகன் கதாபாத்திரமான ரோனித் என்னைப் பார்த்து கைகளை தூக்கி குனிந்து வணங்குவான், அப்போது ஒட்டு மொத்த திரையரங்கமும் திரும்பி அதே போல் என்னைப் பார்த்து செய்தனர்.

நானி
நானி

என் மகனுக்கு என்னவென்றே புரியவில்லை. அவன் என்னைத் திரும்பி பார்த்தான், அந்த பார்வை எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அது எனது சிறந்த அனுபவம், அதுதான் எனது ஜெர்சி தருணம்" என்று பேசியிருக்கிறார் .

Tollywood: நந்தமுரி, கோனிடெல்லா, அல்லு, அக்கினேனி - டோலிவுட் குடும்பங்களின் கதை |Depth

கோலிவுட், பாலிவுட்டைக் காட்டிலும் டோலிவுட்டில் நடிகர்களின் அடுத்தடுத்த தலைமுறையினரும் சினிமாவில் மும்மரமாக ஈடுபட்டு வெவ்வேறு பங்காற்றி இன்று முன்னணியில் இருக்கிறார்கள். இதற்கென அவர்கள் கடுமையான விமர்ச... மேலும் பார்க்க

"கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்பவர்கள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள்" - கொதிக்கும் நடிகர் ரகு பாபு

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் பக்தி - பேண்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் 'கண்ணப்பா'.சிவனை வழிப்படும் தீவிர பக்தரான கண்ணப்பரைப் பற்றியது இப்படம்.நடிகர் விஷ்ணு மஞ்சு க... மேலும் பார்க்க

David Warner: ``சினிமாவுக்குள் வருவது முதலில் பயமாக இருந்தது!'' - டோலிவுட் மேடையில் டேவிட் வார்னர்

டோலிவுட் நடிகர் நித்தின் மற்றும் ஶ்ரீ லீலா நடிப்பில் உருவாகியிருக்கிற `ராபின்ஹுட்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு கேமியோ ரோலில் நடி... மேலும் பார்க்க

Allu Arjun: ``அவர்கள் எனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை ஆனால், அல்லு அர்ஜூன்'' -கணேஷ் ஆச்சாரியா

பாலிவுட்டில், டோலிவுட் என நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா புயலாய் சுற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான ̀புஷ்பா 2' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ̀கிசிக்', ̀சூசேக்கி' பாடலுக்கு இவர்தான் நடன இயக்கம் செய்த... மேலும் பார்க்க

``ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டேன்'' - டேவிட் வார்னர் காட்டம்

நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராபின் ஹுட்'. இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித... மேலும் பார்க்க

``திரைப்படத் துறை பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்..'' - எச்சரித்த தெலுங்கானா மகளிர் ஆணையம்

தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாச பாடல், நடனம், வசனங்கள் வெளியிடப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெலங்கானா மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், டோலிவுட... மேலும் பார்க்க