செய்திகள் :

KKR vs SRH : 'அதிரடி என்ற பெயரில் கொத்து கொத்தாக விக்கெட்டுகள்!' - எங்கே சொதப்பியது ஹைதராபாத்?

post image

'கொல்கத்தா வெற்றி!'

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய தோல்வி இது. கொல்கத்தா அணி எப்படி வென்றது?

KKR vs SRH
KKR vs SRH

'கொல்கத்தா பேட்டிங்!'

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரில் பந்து வீசிய முகமது ஷமி ஒயிடு பாலுடன் தொடங்கினார். இரண்டாவது ஓவரில் பந்து வீசிய பேட் கம்மின்ஸ், குவின்டன் டி காகின் விக்கெட்டை கைப்பற்றினார். மூன்றாவது ஓவரில் பந்து வீசிய முகமது ஷமி, சுனில் நரைன் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இவ்வாறு கொல்கத்தா அணி முதல் 3 ஓவர்களிலேயே ஓப்பனிங் பேட்மேன்களான குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் விக்கெட்களை இழந்திருந்தது.

அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ரஹானேவும், அங்கிரிஷ் ரகுவன்ஷியும் சற்று நின்று விளையாட தொடங்கினார்கள். பவர் பிளேவின் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே, நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸ், பத்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ் என கொல்கத்தா அணியின் ரன் குவிப்பிற்கு பெரிதும் உதவினார். அவர் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அங்கிரிஷ் ரகுவன்ஷி இரண்டு சிக்ஸ், ஐந்து பவுண்டரி என 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாட தொடங்கினர்.

Raghuvanshi
Raghuvanshi

இந்த பார்னர்ஷிப் தொடக்கத்தில் கொல்கத்தா அணிக்கு அமையவில்லை. முதலில் பீல்டிங்கில் சற்று சொதப்பிய ஹைதராபாத் அணி, வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் பார்னர்ஷிப்பை முறியடிக்க விக்கெட்டிற்கு முயற்சி செய்து வந்தது. 15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து இருந்தது. 17வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளாக விளாசினார் ரிங்கு சிங். 19வது ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ், ஃபோர், ஃபோர் என விளாசினார் வெங்கடேஷ் ஐயர். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் கேட்ச் ஆனார் வெங்கடேஷ் ஐயர். அவர் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ஆன்ட்ரே ரசல் கடைசி பந்தில் கேட்ச் ஆனார். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.

'சன்ரைசர்ஸ் சேஸிங்!'

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கியது ஹைதராபாத். அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கி இருந்தனர். சென்ற போட்டிகளில் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என விளையாடிய இருந்த ட்ராவிஸ் ஹெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அது போலவே அவரும் இந்த போட்டியில் வைபவ் அரோரா வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து விளையாடத் தொடங்கினார். ஆனால் இரண்டாவது பந்தில் கேட்ச் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன் மீது இந்த போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Head & Abisheik
Head & Abisheik

ஆனால் அவர் வைபவ் அரோரா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆன்ட்ரே ரசல் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். இப்படி ஹைதராபாத் அணியின் முக்கிய பிளேயர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தது கொல்கத்தா அணி. பவர் பிளேவின் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். கமிந்து மென்டிஸ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சுனில் நரைன் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய அனிகெட் வெர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். கொல்கத்தா அணியின் சிறப்பான பீல்டிங்கினால் அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத்.

க்ளாசென் இன்றைய போட்டியில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வைபவ் அரோரா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அவருக்கு ஒத்துழைத்து யாருமே பேட்டிங்கும் ஆடியிருக்கவில்லை. பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த சிமர்ஜீத் சிங்கை டக் அவுட் செய்தார் வருண் சக்கரவர்த்தி.

Klassen
Klassen

17வது ஓவரில் ஹர்ஷல் படேல் கேட்ச் ஆக ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 201 ரன்களை எட்ட முடியாமல் 120 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தன்னுடைய சொந்த மண்ணில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk Breaking

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு ... மேலும் பார்க்க

CSK vs DC: 'சேப்பாக்கத்தில் சென்னை வீரருடன் நடந்த அந்த உரையாடல்..' - ரகசியம் பகிரும் குல்தீப் யாதவ்!

'சென்னை Vs டெல்லி!'சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பய... மேலும் பார்க்க

"கடலுக்குள் போராட்டம், பதறிய குதிரை; காப்பாற்றிய மக்கள்" - குதிரையேற்ற வீராங்கனைச் சுகன்யா பேட்டி

ஒவ்வொரு வருடமும்அகில இந்திய அளவில் குதிரைப்படை காவல் துறையினருக்கான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நடைபெறும். அந்த வகையில்சமீபத்தில்43-வது அகில இந்திய காவல் குதிரையேற்ற போட்டிகள் ஹரியானா மாநிலம் இந்திய திப... மேலும் பார்க்க

CSK : 'பிரச்னைகளை சமாளிக்க புதிய இளம் வீரரை அழைத்து வரும் சிஎஸ்கே? - யார் இந்த ஆயுஷ் மாத்ரே

'சென்னையின் அழைப்பு!'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை சேர்ந்த 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே என்கிற வீரரை திடீரென சேப்பாக்கத்துக்கு ட்ரையல்ஸூக்காக அழைத்திருக்கிறது. யார் இந்த ஆயுஷ் மாத்ரே? அவரை சிஎஸ்கே தங்... மேலும் பார்க்க