செய்திகள் :

``ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டேன்'' - டேவிட் வார்னர் காட்டம்

post image

நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராபின் ஹுட்'. இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

வரும் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டேவிட் வார்னர் ஐதராபாத் வந்தடைந்திருக்கிறார்.

இதனிடையே விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்?" என காட்டமாக தெரிவித்திருக்கிறார். மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமனதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்பவர்கள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள்" - கொதிக்கும் நடிகர் ரகு பாபு

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் பக்தி - பேண்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் 'கண்ணப்பா'.சிவனை வழிப்படும் தீவிர பக்தரான கண்ணப்பரைப் பற்றியது இப்படம்.நடிகர் விஷ்ணு மஞ்சு க... மேலும் பார்க்க

David Warner: ``சினிமாவுக்குள் வருவது முதலில் பயமாக இருந்தது!'' - டோலிவுட் மேடையில் டேவிட் வார்னர்

டோலிவுட் நடிகர் நித்தின் மற்றும் ஶ்ரீ லீலா நடிப்பில் உருவாகியிருக்கிற `ராபின்ஹுட்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு கேமியோ ரோலில் நடி... மேலும் பார்க்க

Allu Arjun: ``அவர்கள் எனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை ஆனால், அல்லு அர்ஜூன்'' -கணேஷ் ஆச்சாரியா

பாலிவுட்டில், டோலிவுட் என நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா புயலாய் சுற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான ̀புஷ்பா 2' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ̀கிசிக்', ̀சூசேக்கி' பாடலுக்கு இவர்தான் நடன இயக்கம் செய்த... மேலும் பார்க்க

``திரைப்படத் துறை பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்..'' - எச்சரித்த தெலுங்கானா மகளிர் ஆணையம்

தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாச பாடல், நடனம், வசனங்கள் வெளியிடப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெலங்கானா மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், டோலிவுட... மேலும் பார்க்க

SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளியான புகைப்படங்கள்!

`ஆர்.ஆர்.ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் ப்ரியங்கா சோப்ராவும் முக்கியக் கதாபாத்திரத்ததி... மேலும் பார்க்க

Pushpa: `பல காயங்களுடன் அந்த பாடலுக்கு நடனமாடினார்' - அல்லு அர்ஜுன் குறித்து நெகிழும் கணேஷ் ஆச்சர்யா

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது.படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ரூ. 1500 கோடியைத் தாண்டியுள்ளது அதன் வசூல்... மேலும் பார்க்க