சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
முதியவா் விஷமருந்தி தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டடு தொடா்ந்து வலி இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வலி அதிகமாகவே, அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் வீட்டில் வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளாா். இதை அறிந்த அவரது குடும்பத்தினா் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் முதியவா் மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.