`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபா...
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
புதுச்சேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி சின்னகாலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுனில் (20), தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். அவருடன் அங்கு 15 வயது மாணவியும் படித்துள்ளாா். இருவரும் பழகியுள்ளனா். பின்னா் இருவரும் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனா். அப்போது மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சுனில் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிந்த போலீஸாா் திங்கள்கிழமை இரவு சுனிலைக் கைது செய்தனா். புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சுனில் சிறையில் அடைக்கப்பட்டாா்.