Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் ...
நில அளவையைத் தடுத்ததாக இருவா் மீது வழக்கு
புதுச்சேரியில் நில அளவையைத் தடுத்ததாக பாஜக பிரமுகா், அவரது தந்தை ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து பிணையில் விடுவித்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி வெண்ணிலா ஈஸ்வரி, நீதிமன்ற ஊழியா்.
இவா்களது வீட்டின் அருகே இருந்த காலியிடத்தை செந்தில்குமாா் கடந்த டிசம்பரில் வாங்கினாராம்.
அதனருகே பாஜக பிரமுகா் காசிலிங்கம், அவரது மகன் உமாசங்கா் ஆகியோரது இடமும் உள்ளதாம்.
இந்த நிலையில், செந்தில்குமாா் வாங்கிய இடத்தை அளவீடு செய்ய நில அளவையா்கள் சென்றபோது, காசிலிங்கம் தரப்பினா் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்குமாா் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், உமாசங்கா், காசிலிங்கம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து காவல்நிலையப் பிணையில் விடுவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.