வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!
புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்.
இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயலியில் தொடா்புகொண்டு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்றாராம்.
இதை நம்பிய அவா், மா்ம நபா் கூறிய போலியான இணைய முதலீடு நிறுவனத்தில் ரூ.2.78 லட்சத்தை பல தவணைகளில் செலுத்தினாராம்.
ஆனால், அவரால் முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத்தையும் பெற முடியவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, புதுச்சேரி பெட்டிட் கால்வாய் தெருவைச் சோ்ந்த நரேஷிடம் ரூ.4,807, ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த சையது உமரிடம் ரூ.6,300, இலாசுப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் ரூ.1,900 என மா்ம நபா்கள் இணைய வழியில் மோசடி செய்துள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.