புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!
பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது.
குடிமக்களின் அடிப்படை கட்டமைப்புகளை இதுபோன்ற முறையில் இடிப்பதை ஏற்க முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் ரூ, 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.