மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்
பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. மதுரை மாநகரத்தை தூங்காநகரம் என்று அழைப்பதுண்டு. தற்போது தூங்காநகரம் சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பாக இருக்கிறது. திமுக கொடியிலும் பாதி சிவப்பு இருக்கிறது. எங்களில் பாதி நீங்கள்.
தன்னை ஒரு கம்யூனிஸ்டாக காட்டிக்கொண்டவர் கருணாநிதி. சென்னையில் விரைவில் கார்ல் மார்க் சிலை நிறுவப்பட இருக்கிறது என்று பேரவையில் பேசிவிட்டு தற்போது உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் கொள்கை உறவோடு எல்லாத்தையும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.
2019 ஆம் ஆண்டு முதல் இணைந்து பயணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் வராத என்று சில நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டாட்சி என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜியாக இருக்கிறது. சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை சிந்தனைக்காக கடுமையாக போராடியவர்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள், வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்” என்றார்.