ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பக்தர்கள் உணவுக்கூடம் கட்ட பூமி பூஜை
ஆம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளர்கள் நிதி ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்கள் உணவுக் கூடம், நிர்வாக அலுவலர் அலுவலகம், அர்ச்சகர் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூரில் தவெக ஆர்ப்பாட்டம்!
ஆம்பூர் நகர் மன்ற துணைத் தலைவர் எம். ஆர். ஆறுமுகம், திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சாய் கே. வெங்கடேசன்,கோயில் செயல் அலுவலர் வினோத்குமார்,கோயில் அறங்காவலர் குழு தலைவர் கீதா, அறங்காவலர் குழு உறுப்பினர் ரமேஷ், நாகநாத சுவாமி அறங்காவலர் குழுத் தலைவர் கைலாஷ் குமார், முக்கிய பிரமுகர்கள் சேகர் ரெட்டியார் ஜெயவேல் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.