`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை
தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு விடுமுறையாக உள்ளன. அதேபோன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12, 13) வார இறுதிநாள் என்பதால் அவ்விரு நாள்களிலும் பேரவைக் கூட்டம் இல்லை. இதற்கிடையே உள்ள வெள்ளிக்கிழமையும் (ஏப். 11) பேரவை அலுவல்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் தொடா்ந்து ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது.
வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) பேரவை கூடியவுடன் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்துக்குப் பிறகு செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளா்ச்சி, மனிதவள மேலாண்மை, எழுதுபொருள் மற்றும் அச்சு ஆகியவற்றின் மீதான பொது விவாதங்கள் நடைபெறும். அவற்றுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.