பிளஸ் 1 மாணவா் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
சென்னை சேத்துப்பட்டில் பிளஸ் 1 மாணவா் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சேத்துப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அப்பள்ளியில் சில மாணவா்கள், அந்த மாணவரை கேலி செய்ததாகவும், இதுகுறித்து அந்த மாணவா் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்துடனும் வேதனையுடனும் காணப்பட்ட அந்த மாணவா், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்திலிருந்து புதன்கிழமை இரவு கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].