Trump tariffs: ``சீன அதிபர் புத்திசாலி; தன் நாட்டை அவர் நேசிக்கிறார்" - வரி விவக...
வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு: காஞ்சிபுரத்தில் தவெக ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம்: முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் தவெக ஆர்ப்பாட்டம்!
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே. பி. தென்னரசு தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட தவெகவினர் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், இதனை திரும்பப் பெறும் வரை தவெக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.