Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா...
கார்த்தி சுப்புராஜ் வெளியிட்ட மெட்ராஸ் மேட்னி பட போஸ்டர்..!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெட்ராஸ் மேட்னி என்ற புதிய படத்தினை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு பல இயக்குநர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது.
ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவில், கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களே வெற்றிபெற்று வருகின்றன. அதேவகையில் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
Happy to reveal the First look of @DreamWarriorpic presents, #MadrasMatinee
— karthik subbaraj (@karthiksubbaraj) April 4, 2025
A @MadrasMotionPic Production ‼️
Written & directed by - @keyanmk
All the very best to whole team @kaaliactor@Roshni_offl@Vishva_actor@gk_anand@KCBalasarangan@jacki_art… pic.twitter.com/l7lAKxyzdU