செய்திகள் :

Devyn Aiken: அமெரிக்க Influencer வாழ்க்கையை மாற்றிய மூக்கு அறுவை சிகிச்சை; யார் இந்த வைரல் பெண்?

post image

உருவ கேலி என்பது உலகம் முழுவதுமே இருக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் வசித்து வரும் 30 வயதான டெவின் ஐகெனும் (Devyn Aiken) இதற்குத் தப்பவில்லை.

இவருக்கு நடந்த உருவ கேலிக்குக் காரணம், சராசரியைவிட நீளமாக இருந்த இவருடைய மூக்குதான். பள்ளி நாள்களில் ஆரம்பித்து திருமண வாழ்க்கை வரை, தன்னுடைய நீண்ட மூக்கு காரணமாகக் கேலி, கிண்டல்களைச் சந்தித்து வந்த டெவின், சில மாதங்களுக்கு முன்னால் ரைனோபிளாஸ்டி (rhinoplasty) எனப்படுகிற மூக்கு அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் டிக்டாக் Influencer-ஆன டெவின், தன்னுடைய இந்த மூக்கு அழகுப் பயணத்தைப் பற்றி வெளியிட்ட வீடியோ ஒன்று 4.5 மில்லியன் வியூஸை தாண்டி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

US Influencer Devyn Aiken
US Influencer Devyn Aiken

அந்த வீடியோவில், "பள்ளிக்கூடத்தில் என் தோழர்கள் என்னைச் சூனியக்காரி என்று கேலி செய்தார்கள். என் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இல்லை.

US Influencer Devyn Aiken
US Influencer Devyn Aiken

அவர் என் இயல்பான தோற்றத்தை விரும்பினாலும், இதுதொடர்பான வாக்குவாதங்கள் எங்கள் திருமண வாழ்க்கையில் நிரம்பிக் கிடந்தன.

இந்த நரகத்திலிருந்து தப்பிக்கவே என் மூக்கை அழகாக்க நான் முடிவு செய்தேன். ஒரு பிளாஸ்டிக் சர்ஜனை சந்தித்தேன். அவர் என் மூக்கை மட்டுமல்ல, என் வாழ்க்கையையும் அழகாக்கி விட்டார்.

6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனது வாழ்வே மாறிவிட்டது. இதற்காக நான் 11 ஆயிரம் டாலர் செலவழித்தேன் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 9 லட்சம்).

அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே என்னுடைய இந்த புதிய அழகான மூக்கும் தோற்றமும் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்துவிட்டன.

நீண்ட வருடங்களாகத் துன்பத்தில் உழன்று கிடந்த நான், உடனே விவாகரத்து கோரி மனு அளித்துள்ளேன்.

US Influencer Devyn Aiken
US Influencer Devyn Aiken

என்னுடைய இந்த நம்ப முடியாத மாற்றத்தை வீடியோவாக பதிவிட்டேன். பலரும் கமெண்டில் எனது புதிய முக அமைப்பைப் பாராட்டுகின்றனர்.

சிலர், என்னுடைய இந்தப் புதிய தோற்றம் சில பிரபலங்களைப் போல் இருப்பதாகப் பாராட்டுகின்றனர். இவையெல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதோடு என்னை மேலும் முன்னேற ஊக்குவிக்கிறது" என அவர் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

லிவ் இன் உறவு, கார்கள், ஆடம்பர வாழ்க்கை: போதைப்பொருளுடன் பிடிபட்ட பஞ்சாப் பெண் கான்ஸ்டபிள் டிஸ்மிஸ்!

பஞ்சாப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து பஞ்சாப் அரசு முதற்கட்டமாக போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. சண்டிகரை சேர்ந்த அமன்தீப் கவுர் ... மேலும் பார்க்க

‘மீட்பர்’ ஆனந்த் அம்பானியால் ‘காப்பாற்றப்பட்ட’ பிராய்லர் கோழிகள் இப்போது எங்கே?

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பிராய்லர் கோழிகளை சாவிலிருந்து ‘மீட்ட’ சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிரிபுதிரி ஹாட் டாபிக்.தனது 30-வது பிறந்தநாளை முன்னி... மேலும் பார்க்க

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண... மேலும் பார்க்க