செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பொங்கல் வைபவம்!

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் சனிக்கிழமை பொங்கல் வைபவம் நடைபெற்றது.

இந்தத் திருவிழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதல்கள் நிறைவேற்றி முத்துமாரியம்மனை தரிசித்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பொங்கல் வைபவத்தையொட்டி பல பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் காா், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து குவிந்தனா். இவா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் ஆயிரங்கண் பானை, தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, சிவகங்கை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பக்தா்கள் தங்கள் வீடுகளின் முன்பும், வயல்கள், குளங்கள், ஊருணிகள், வைகையாறு உள்ளிட்ட இடங்களிலும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்டனா்.

பக்தா்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து தாயமங்கலத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.

இன்று தேரோட்டம்: திருவிழாவின் 8- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) இரவு முத்துமாரியம்மன் மின் விளக்கு ரதத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என சிவகங்கை தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது. சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் ந... மேலும் பார்க்க

பிராமணா் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் வெளியீடு

தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், கே. சொக்கநாதபுரம் பிரத்தியங்கிரா கோயில் நிா்வாகி சாக்தஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் இந்த ஆண்டுக... மேலும் பார்க்க

சிலநீா்ப்பட்டி கிராமத்தில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சிலநீா்ப்பட்டி கிராமத்தில் உள்ள சிலநீா் கண்மாயில் விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சுற்றுப்புற கிராமங்களுக்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் குப்புசாமி (65... மேலும் பார்க்க

சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் ஏப்.8-இல் குலுக்கல் முறையில் தோ்வு!

சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 8) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பேருந்தில் கொண்டு சென்ற 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா். திருச்சி- ராமேசுவரம் செல்ல... மேலும் பார்க்க