செய்திகள் :

‘மீட்பர்’ ஆனந்த் அம்பானியால் ‘காப்பாற்றப்பட்ட’ பிராய்லர் கோழிகள் இப்போது எங்கே?

post image

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பிராய்லர் கோழிகளை சாவிலிருந்து ‘மீட்ட’ சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிரிபுதிரி ஹாட் டாபிக்.

தனது 30-வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணரின் ஆசிகளைப் பெறுவதற்காக குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து துவாரகாவுக்கு பாதயாத்திரையாக சென்ற அவர், தனது பயணத்தின் நடுவில், பிராய்லர் கோழிகளை கறிக்கடைகளுக்கு ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து இந்த கோழிகளை காப்பாற்றியுள்ளார்(?).

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் தனது உதவியாளர்களிடம் கோழிகளுக்கான தொகையை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு கோழிகளை எடுத்து வருமாறு கட்டளையிடுகிறார்.

அம்பானியும் விலங்குகளும்

வந்தாரா (வன நட்சத்திரம்) என்ற பெயர் கொண்ட விலங்குகள் மறுவாழ்வு மையத்தை ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார். ஜாம் நகரில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த வந்தாராவில் காட்டுயிர்களுக்கான மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள், மிருகக் காட்சி சாலைகள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தான் 12 வயதாக இருக்கும்போது ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்கு சாலை மார்க்கமாக செல்கையில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல்லும் யானைக் குட்டிகளை பார்த்து தான் வேதனையடைந்தாகவும், அதுவே வந்தாரா உருவாக அடித்தளமாக அமைந்தது என்றும் ஆனந்த் அம்பானி குறிப்பிடுகிறார்.

இங்கிருக்கும் மிருகக் காட்சிசாலையில், போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்கங்கள், இந்தியாவைச் சேர்ந்த புலிகள் உள்ளிட்ட ஏராளமான மாமிச உண்ணிகள் என 2000-க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளுக்கு என்ன உணவளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. நிச்சயமாக ஜாம் நகரில் ஆனந்த் அம்பானி ‘மீட்ட’ அந்த கோழிகளாக இருக்காது என்று நம்புவோம்.

இன்னொரு புறம் இந்தச் சம்பவத்தை வட இந்தியாவில் ‘கோழிகளுக்கு விடுதலையை பரிசளித்த ஆனந்த் அம்பானி’, ‘கோழிகளின் இருண்ட தலைவிதிக்கு முடிவு’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிவருகின்றனர். ஏற்கெனவே குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் மாட்டிறைச்சி அல்லது மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது காதுகளில் விழுந்தாலும் ஒருபோதும் கோழிகளை யாரும் தடுத்து நிறுத்தியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. இனி அது போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்பதற்கான தொடக்கமாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

நாடு முழுவதும் உணவு தேவைக்காக கோடிக்கணக்கான கோழிகள் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் கோழிப்பண்ணை தொழில் என்பது ஒரு பரந்து விரிந்த சந்தை. இந்தியா முழுவதும் 1.5 முதல் 2 மில்லியன் சில்லறை கோழி விற்பனையாளர்கள் செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி பலரது வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒரு தொழிலை இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பலரும் கோழிகளை ‘மீட்க’ கிளம்பினால் என்னவாகும்?

ஜாம்நகர் ஒரு தொழில்கள் புழங்கும் பகுதி. அங்கிருக்கும் மக்கள் இதற்கு முன்பு கோழிகள் கறிக்காக கொல்லப்படுவது குறித்து புகார் அளித்தாக ஏதேனும் தரவுகள் உள்ளதா? அங்கு கோழிகளை மீட்க வேண்டிய திடீர் அவசியம் எழுந்தது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனந்த் அம்பானி மீட்டதாக சிலாகிக்கப்படும் பிராய்லர் கோழிகள் முழுக்க முழுக்க இறைச்சிக்காக உருவாக்கப்படுபவை. நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி வாங்கி உண்ணமுடியாத பலரது தேர்வும் பிராய்லர் கோழியாகத் தான் இருக்கும். அது மட்டுமின்றி தெருவோரக் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை பிராய்லர் கோழிகளே பிரதான உணவாக இருக்கிறது. இப்படியான சூழலில் இவற்றை காப்பாற்றுவதாக கூறி நடத்தப்பட்ட இந்த நிகழ்வை ‘பிஆர்’ உத்தி என்று சொல்வது நியாயம்தானே?


அந்த வீடியோவில் கோழி ஒன்றை கையில் ஏந்தியபடி கடவுளின் பெயரையும் உரக்க உச்சரிக்கிறார் அம்பானியின் மகன். இதன் மூலம் தனது செயலுக்கு ஆன்மிக சாயம் பூச நினைக்கிறாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக விலங்குகளின் திடீர் காவலராக தன்னை காட்டிக் கொள்ளும் ஆனந்த் அம்பானி, தனது திருமண நிகழ்வின் போது சுமார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதலையின் தோலில் இருந்து செய்யப்பட்ட சிவப்பு நிற லெதர் ஜாக்கெட்டை அணிந்திருந்தார் என்பது எவ்வளவு பெரிய நகை முரண்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஜியோமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் அசைவ உணவு வகைகள், லெதர் ஜாக்கெட், பெல்ட்டுகள் விற்கப்படுவதில்லையா? அவற்றில் விற்கப்படும் சிக்கன், மட்டன் மசாலாக்கள் ஒருவேளை காய்கறிகளை சமைப்பதற்காக இருக்கலாம்.

இந்த ‘கோழி மீட்பு’ சம்பவம், இதுவரை பெரும் பணக்காரராக, ஆடம்பர பிரியராக மீடியாக்களில் காட்டப்பட்ட ஆனந்த் அம்பானியை ஒரு தாராளபிரபுவாக கட்டமைக்கும் ஒரு முயற்சியின் தொடக்கமாகவே தெரிகிறது. தாங்கள் மீட்கப்பட்டோமோ இல்லை ‘பிஆர்’ விளம்பரங்களுக்காக கடத்தப்பட்டோமோ என்று ஒரு நிமிடம் அந்த கோழிகளுக்கே தலைசுற்றியிருக்கலாம்.

அந்த கோழிகளுக்கு என்னவானது என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் துளைத்தெடுக்கப்படுவதால், விரைவில் அவை வந்தாராவின் புல்வெளிகளில் மகிழ்ச்சியோடு சுற்றித் திரிவதாக ஒரு வீடியோ விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம் அல்லது பாதயாத்திரை செல்லும் வழியில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் அல்லது ஆடுகளை மீட்ட ஆனந்த் அம்பானி என்ற புதிய செய்தியின் மூலம் அவை மறக்கப்படிக்கப்படலாம்.

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண... மேலும் பார்க்க

Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?

சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபல... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி

வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அ... மேலும் பார்க்க

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க