L2: எம்புரான் படத்திற்குத் தடை கோரிய கேரள பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?
Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!
ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர். இங்கு சுமார் 32 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் தங்களது சொந்த கிராமத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த கிராமம் நல்ல சாலைகள், நிலையான நீர் வளங்கள், நல்ல சுகாதார அமைப்பு எனக் கிராமப்புற வளர்ச்சியில் மேலோங்கி உள்ளது.

இந்த கிராமத்தைத்தான் இந்தியாவின் பணக்கார கிராமம் என்று கூறுகின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்த கிராமம் பணக்கார கிராமமாக அறியப்படுவதற்கு முக்கியமான காரணம், வங்கி உள் கட்டமைப்புகள்தான். இந்தக் கிராமத்திலிருக்கும் அரசு மற்றும் தனியார் உட்பட 17 வங்கிகளில் கிராமவாசிகளின் வைப்புத்தொகை ரூ. 7000 கோடிக்கு மேல் உள்ளது.
அறிக்கையின்படி, இந்த கிராமத்தில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 1200 குடும்பங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளன. அங்கிருந்து தங்களின் பொருளாதாரத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளின் குடியேறி உள்ளனர். பிற நாடுகளுக்குக் குடிபெயர்ந்த போதிலும் இந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களுடன் ஒரு வலுவான உறவுகளைப் பேணிக்காத்து வருகின்றன.
வருமானத்தின் பெரும் பகுதியை உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதி பங்களிப்புடன் இந்த கிராமத்திற்கு விவசாயம் மற்றொரு முக்கிய செல்வ ஆதாரமாக உள்ளது.

மக்காச்சோளம், கரும்பு ஆகியவை முதன்மையான விளைப்பொருட்களாக உள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் செல்வதைத் தவிர இந்த கிராமத்தின் பொருளாதாரம் விவசாயத்தைச் சுற்றியுள்ளது.
1968 ஆம் ஆண்டு லண்டனில் மாதபர் கிராமம் சங்கத்தை உருவாக்கினர். இது கிராமத்திற்கும் வெளிநாட்டில் வசிக்கும் அவர்களது பூர்வீக மக்களுக்கும் இடையேயான உறவை ஆரோக்கியமாகப் பேணிக்காத்து வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...