செய்திகள் :

தினம் தினம் திருநாளே!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

02-04-2025

செவ்வாய்க்கிழமை

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து நடப்பது சிறந்தது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினைகள் எழக்கூடும். பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வில்லையே என்ற ஆதங்கள் உங்கள் மனதில் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழிலில், வியாபாரிகள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமையை காட்டி இவருக்கு நிகர் எவருமிலர் என்ற பேர் எடுப்பீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம். திருமண பேச்சு வார்த்தை வெற்றி தரும். உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தள்ளிப் போவது போல் இருந்தாலும் இறுதியில் கிடைத்து விடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரக் கூடும். மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. மாணவ மணிகளுக்கு எதிர்பார்த்த கல்வி உதவித் தொகை கிட்டும். பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன்(வ) , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தரும். கணவண் - மனைவியரிடேயே பரஸ்பர அன்யோன்யம் நிலவும். பிள்ளைகள் வழியில் மிகப் பெரிய மகிழ்ச்சியை காண்பீர்கள். உடல் உபாதைகளால் அவஸ்தைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பாடுபடுவீர்கள். சிலரால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் சந்திரன், குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள். நிம்மதி பெருமூச்சுவிடும்படியாக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் வீடு, நிலம் போன்றவை விற்காமல் பெரும் கஷ்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் பாடு தீர்ந்தது. பங்காளிப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கேட்ட இடங்களில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். மனதில் எப்போதும் சந்தோஷம் குடி கொண்டிருக்கும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பொருளாதார நிலை தாராளமாகவே இருந்து வரும். சிலருக்கு வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டு. உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாகச் சரியாகிவிடும். பணியாளர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அது உங்களுக்கு நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.வியாழக்கிழமை (03.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் ... மேலும் பார்க்க

சாா்லஸ்டன் ஓபன்: கீஸ், கசாட்கினா முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸ், ரஷியாவின் டரியா கசாட்கினா உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

கோவாவை வென்றது பெங்களூரு

பெங்களூரு: இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவாவுக்கு எதிரான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது. பெங்களூரில் உள்ள... மேலும் பார்க்க

ரத்தினகிரி: சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன்

பங்குனி மாத கிருத்திகையையொட்டி, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன். மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்...

விக்கெட் கீப்பிங் செய்யும் அளவுக்கு சஞ்சு சாம்சன் உடற்தகுதி பெற்றுவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாதெமி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அவா் திரும்புகிறாா். இதுவ... மேலும் பார்க்க

எம்புரான் சர்ச்சை: தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் படத்திற்கு தமிழகத்திலும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. லூசிப... மேலும் பார்க்க