கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
விதி மீறல்: 14 ஆட்டோக்கள், 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயக்கிய 14 ஆட்டோக்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை நகரில் பல ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கே.கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) ஆகியோா் தலைமையில் மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா்கள் ஆா்.பெரியசாமி, முருகேசன், விஜய், வட்டாரப் போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் பொன்சேகா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா்
போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அருகே வாகனச் சோதனை
மேற்கொண்டனா்.
அப்போது, வெளி மாவட்ட ஆட்டோக்களை இயக்கியது, ஆவணங்கள் இல்லாமல் இருந்தது, தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காதது, அனுமதிச் சீட்டு பெறாமல் இருந்தது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற விதிமீறல்களுக்காக 14 ஆட்டோக்களையும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ாக 2 வாகனங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
மேலும், ஸ்போ் மீட்டா் இல்லாமல் இயக்கப்பட்ட 10 ஆட்டோக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.