இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
கரூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் யங் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் மருத்துவா் லோகநாயகி தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் ராஜா, துணை முதல்வா் (பொ)ராமேஸ்வரி, டிஎன்பிஎல் நிறுவனத்தின் முதல் நிலை மேலாளா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறை மருத்துவா்கள், யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவா் லோகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.