டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிவு!
மும்பை: வர்த்தக கட்டண கவலைகளுக்கு மத்தியில், அச்ச உணர்வு காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காரணமாக இன்று பங்குச் சந்தையும் சரிந்து முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.07 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.84.96 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.34 ஐ தொட்ட நிலையில், முடிவில் 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 22 காசுகள் உயர்ந்து ரூ.85.30 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: 18 ஆண்டுகளுக்கு பிறகு பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம்: மத்திய அரசு