சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி
மும்பை: வணிகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியபோதே, தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியால், வணிகமும் சரிவுடன் காணப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காரணமாக, பங்குச் சந்தைகளில் இன்று வீழ்ச்சி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.