நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
தடாலடியாகக் குறைந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், ஒரே நாளில் வீழ்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 66,880 விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள் ரூ. 67,600, செவ்வாய் ரூ. 68,080, புதன் ரூ. 68,080, வியாழன் ரூ. 68,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,280 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 67,200-க்கும் ஒரு கிராம் ரூ. 8,400-க்கும் விற்கப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 4 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஒருவர், தங்கத்தின் விலை 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.