அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரிவிதிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்னதாக, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதன்கிழமை மாலை லாபத்தில் முடிவடைந்தன.
இன்று அதிகாலை வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. தற்போது, நிஃப்டி 49.90 புள்ளிகள் சரிந்து 23,282.45 ஆகவும், சென்செக்ஸ் 193.68 புள்ளிகள் சரிந்து 76,423.76 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
நிப்ஃடி ஐடி பங்குகள் 2.5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. இதனிடையே நிஃப்டி பார்மா குறியீடு 4 சதவிகிதம் அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.