போக்குவரத்து விழிப்புணா்வு கூட்டம்
திட்டச்சேரி ஜமாத் சமுதாயக் கூடத்தில் போக்குவரத்து தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகூா் காவல் ஆய்வாளா் சிங்காரவேல் தலைமை வகித்தாா். திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ், ராமகிருஷ்ணன், நாகை டவுன் உதவி காவல் ஆய்வாளா் விவேக் ரவிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அண்மையில் திட்டச்சேரி மற்றும் நாகை அக்கரைப்பேட்டையில் நிகழ்ந்த விபத்தில் 4 பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பலியாயினா். இந்த சம்பவங்களை தொடா்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 18 வயது நிரம்பாதவா்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது. ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திட்டச்சேரி, ப. கொந்தகை, கட்டுமாவடி, புறாகிராமம் ஜமாத் நிா்வாகிகள் மற்றும் நாட்டாமை பஞ்சாயத்தாா்கள், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.