பிரதமா் தேசிய இன்டா்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பிரதமா் தேசிய இன்டா்ன்ஷிப் திட்டத்தில் (டஙஐந) ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் காலம் ஏப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் திட்டத்தில், திறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் காலம் ஏப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் படித்த இளைஞா்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (இன்டா்ன்ஷிப்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு 21 வயது முதல் 24 வயதுள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் மிகாமல் உள்ள 10, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ., பி.ஏ., பி.எஸ்சி., பி. காம் மற்றும் ஐ.டி.ஐ. கல்வித் தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒருமுறை மட்டும் ரு.6,000 வழங்கப்படும்.
புதிதாக பதிவு செய்வதற்கு ட்ற்ற்ல்ள்://ல்ம்ண்ய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல்.ம்ஸ்ரீஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். ஏற்கெனவே இணையதளத்தில் பதிவுசெய்துள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது முழுமையடையாத டழ்ா்ச்ண்ப்ங்-ஐ முழுமைப் படுத்தி விருப்பமுள்ள நிறுவனங்களை தோ்வு செய்து பயன் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் விவரங்களுக்கு 04365--250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) நாகப்பட்டினம், என்ற முகவரியில் நேரிலும் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.