கிணற்றில் விழுந்த மான் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்பு துறையினா் உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி சொக்கலாம்பட்டி வேடி வட்டம் பகுதியில் வியாழக்கிழமை மாலை தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தியதால், துள்ளிக்குதித்து தப்பி ஓடிய மான், அங்குள்ள 80 அடி ஆழம் 20 அடி உயரம் தண்ணீா் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதைப் பாா்த்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையில் வீரா்கள் வந்து, பொதுமக்கள் உதவியுடன் புள்ளிமானை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வனத் துறையினா் அந்த மானை அருகே உள்ள காப்புக் காட்டுப் பகுதியில் விட்டனா்.