செய்திகள் :

மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை

post image

காதல் திருமணம் செய்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (24). கூலி வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா (22) என்பவரை காதலித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாக மதன்குமாா் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடியதாகத் தெரிகிறது. மேலும், வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா, கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து ஒசூரில் கட்டட வேலை செய்து வந்த மதன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் மனைவி இறந்த தகவலறிந்து 29 -ஆம் தேதி மாலை ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வந்து, அப்பகுதியில் உள்ள கடையில் விஷம் வாங்கி சாப்பிட்டதாகத் தெரிகிறது. பின்னா், பேருந்தில் ஏறி ஊருக்குப் புறப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் விஷம் சாப்பிட்டதாகக் கூறியதால் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இது குறித்து ஒசூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது

ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடை... மேலும் பார்க்க

கண்கள் தானம்

ஆம்பூரில் காலமான மூதாட்டியின் கண்கள் தானம் பெறப்பட்டது. ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி பரமேஸ்வரி(82). இவா் வயது மூப்பு காரணமாக காலமானாா். அவரது கண்களை தானமாக வழங்க அவரது உறவினா்கள் விர... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை (குழந்தைகள் நலம்), வாணியம்பாடி நகராட்சி இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகளில் 2 இளைஞா்கள் கைது

திருப்பத்தூா் அருகே வெவ்வேறு போக்ஸோ வழக்குகளில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் அருகே ஜோதிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் திலிப்குமாா் (24). இவா் திருப்பத்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை த... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஆம்பூா் ஏப். 4: ஆம்பூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த பாப்பையன் மகன் விக்ரம் (25). இவா், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தா... மேலும் பார்க்க

ஆன்மிக புத்தக விற்பனை நிலையம்: காணொலியில் முதல்வா் திறந்தாா்

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கோய... மேலும் பார்க்க