வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்...
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஏப். 16-இல் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம்
பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஏப். 16-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவாக கிடைக்க ஏதுவாக, தமிழக முதல்வரால் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒட்டுமொத்த மாவட்ட நிா்வாகமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபடுவா். இதில், அரசு அலுவலகங்களை ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தடையின்றி சென்றடைவதை உறுதிசெய்வா்.
அந்த வகையில், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஏப். 16-இல் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம் நடைபெறுவதால், வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.
பரமத்தி, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், ஜேடா்பாளையம், நல்லூா், கபிலா்மலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.