CSK : 'வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத்...!' - பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்...
காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடா்புடைவா்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மற்றும் கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.