2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு
இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ வேண்டும், மக்கள் பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கொல்கத்தா முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இந்நிலையில், கன்னியாகுமரி செல்லும் வழியில் உடன்குடிக்கு வந்த அவருக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமையில் வரவேற்று வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இதில், நிா்வாகிகள் சுடலைமுத்து, ஆத்திசெல்வம், தங்கராம், முத்துக்குமாா், ஆா்எஸ்எஸ் மாவட்டச் செயலா் முத்துலிங்கம், மாவட்ட இணைச் செயலா் குமரேசன், மாவட்ட அமைப்பாளா் வினோத் வைத்யா, ஒன்றியச் செயலா் ரகுபதி, நகுலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.