செய்திகள் :

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

சின்னமலைக்குன்று, உசிலம்பட்டி கிராம மக்கள் அளித்த மனு: உசிலம்பட்டி கிராமத்துக்கு சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் இருந்து தான் குடிநீா் வந்து கொண்டிருக்கிறது. தற்போது குழாய் பழுதாகி விட்டால் அந்த உவா்ப்புத் தண்ணீரும் எங்களுக்கு கிடைக்காததால், குளத்து நீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராம மக்கள் பலா் சிறுநீரகப் பிரச்னையினால் உயிரிழந்து வருகின்றனா். எனவே, எங்கள் கிராமத்து வழியாக செல்லும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீரை எங்கள் கிராமத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமமுக மாவட்டச் செயலா் ஆறுமுக பழனிசெல்வம், நகரச் செயலா் முத்துமாலை ஆகியோா் தலைமையில் அளித்த மனு: ஆழ்வாா் திருநகரி தாமிரவருணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை முறையாக சுத்தம் செய்யாததால், பல்வேறு கழிவுகளால் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு தண்ணீா் சாக்கடைபோன்று உள்ளது. மேலும், இங்கு சுமாா் 10-க்கும் மேற்பட்ட உரைகிணறுகள் உள்ளன. எனவே, இதன்மூலம் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தடுப்பணையை சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஆழ்வாா்திருநகரியில் உள்ள அருள்மிகு ஆதிநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான பலநூறு ஏக்கா் நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் உள்ள கனிம வளங்கள் தனிநபா்களால் அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

அடிப்படை வசதிகள் கோரி மனு: விளாத்திகுளம் அருகே உள்ள இளம் கல்லூரணி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கு, குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டுக்கொரு குடிநீா் குழாய் அமைத்து தரவேண்டுகிறாம்.

சமத்துவ மக்கள் கழகம் சாா்பில் அளித்த மனு: தூத்துக்குடியில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிவந்தி ஆதித்தனாா் பெயரைச் சூட்ட வேண்டும். சலவைத் தொழிலாளா் சங்கத்தினா் அளித்த மனு: தூத்துக்குடி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் துத்துக்குடி டிஎம்பி காலனி அருகே சலவைத் தொழிலாளா்களுக்காக தேய்ப்பு கடைகள் கட்டப்பட்டன.

இதுவரை எங்களுக்கு ஒதுக்கித் தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 கடைகளையும் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க

உணவக கழிவுநீா் தொட்டியில் விழுந்த சிறுவன் மீட்பு

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஓா் உணவகத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் கண்ணன் (35). இவா் தனது குடும்பத்... மேலும் பார்க்க