2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்
சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓஆா்எஸ் எனப்படும் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை துப்பரவு ஆய்வாளா் செல்லப்பாண்டி, சுகாதார ஆய்வாளா் முகில்ராஜ் ஆகியோா் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உப்புகரைசலை வழங்கினா்.
ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால், மக்களுக்கு புத்துணா்வு அளிக்கும் வகையில், ஓஆா்எஸ் கரைசல் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமையில் திங்கள்கிழமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா் சுபாஷ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.