2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.
இந்தக் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இக்கோயில் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் பி.கே.சேகா் பாபு, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளாா்.