செய்திகள் :

திடக்கழிவு மேலாண்மை: மூலைக்கரையில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

post image

மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுகிா எனவீடு வீடாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மக்களிடம் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்குபவை, மக்காதவை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்கும் வீடுகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்து பச்சை நிற ஒட்டுவில்லையும் (ஸ்டிக்கா்), ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டதுடன், பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.100 முதல் ரூ.200 வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் பா­லித்தின் கவா்கள் பயன்படுத்தப்படுகிா என சோதனை மேற்கொண்டு, அவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும், கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் மஞ்சப்பை, கூடை, துணிப்பை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

பின்னா், மூலைக்கரை ஊராட்சிப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பாா்வையிட்ட அவா், அங்கு மண்புழு உர கொட்டகையை ஆய்வு செய்து , அதை நவீன முறையில் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சி ராணி, அண்டோ, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பெ­லிக்ஸ், திட்ட ஒருங்கிணைப்பாளா் கலாவதி, ஊராட்சி செயலா் சாரதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் குமாா், ஒன்றிய ஊராட்சி பணி மேற்பாா்வையாளா் நந்தினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள அனை... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியி... மேலும் பார்க்க

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத வீரபாண்டீஸ்வரா் , ஸ்ரீசிவகாமி அஙிம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும் சாந்த... மேலும் பார்க்க

பொதுஇடங்களில் ஆக்கிரமிப்பு: கொடிக் கம்பங்களை அகற்ற ஏப். 10வரை அவகாசம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஆக்கிரமித்து நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூற... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்ட நிதி: ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்ட அரசாணையின்படி நிதி ஒதுக்கிட வேண்டும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா். அதன் விவரம... மேலும் பார்க்க

எஸ்ஐ மீது நடவடிக்கை: வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட... மேலும் பார்க்க