செய்திகள் :

அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

post image

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளின் போது அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைந்து மாலை போல போட்டுள்ளனர்.

தர்பூசணியில் ரசாயன விவகாரம்: உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்

இதனை பார்த்த அந்த பகுதியினர், அண்ணா சிலை அருகே உள்ள அண்ணா நுாற்றாண்டு மண்டபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெறும் திமுக மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணி பயிற்சி பட்டறை கூட்டத்திற்கு வந்த கூட்டத்திற்காக வந்த திமுகவினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், அண்ணா சிலை மீது இருந்த கொடியை அகற்றினர். பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை இணைத்து மாலை போன்று அண்ணா கழுத்தில் அணிவித்து தெரியவந்தது.

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன... மேலும் பார்க்க

யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!

யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.யேமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது என இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக அபாரமாக ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானாவில் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 ... மேலும் பார்க்க

"எங்களை சிறையில் தள்ளினாலும் ஊதிய முரண்பாடு குறையும் வரை போராடுவோம்"

சென்னை: எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோ... மேலும் பார்க்க

தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ர... மேலும் பார்க்க