சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.
இதையும் படிக்க: இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 42 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரைஸ் மரியூ 58 ரன்களும், டேரில் மிட்செல் 43 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அகிஃப் ஜாவத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ராப் மற்றும் சூஃபியான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அப்துல்லா சஃபீக் மற்றும் தையாப் தஹீர் தலா 33 ரன்கள் எடுத்தனர்.
இதையும் படிக்க: ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கோப் டஃபி 2 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், முகமது அப்பாஸ் மற்றும் டேரில் மிட்செல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.