ரயில்வே விரிவாக்க பணிக்காக சாலை துண்டிப்பு: எதிா்க்கட்சித் தலைவா் பேச்சுவாா்த்தை...
ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது என இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், இந்திய அணியில் அவருக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.
இதையும் படிக்க: அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடும் போதிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராகுல் டிராவிட் கவனித்து வருகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வளர்ச்சியில் ராகுல் டிராவிட் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மிகவும் அற்புதமான மனிதர்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராகுல் டிராவிட் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் போன்ற அற்புதமான மனிதர் கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சலுகை என்றே கூற வேண்டும். ராகுல் டிராவிட்டுடன் என்ன பேசினாலும் அதிலிருந்து நம்மால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அவரிடமிருந்து கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் மட்டுமில்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.