செய்திகள் :

சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு: 460 காளைகளை அடக்க முயன்ற 20 மாடுபிடி வீரா்கள் காயம்!

post image

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 460 காளைகள் களமிறங்கின; அவற்றை அடக்க முயன்றதில் 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராம கோயில்களில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, கோட்டாட்சியா் அபிநயா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலையில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

போட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 460 காளைகள் களமிறக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ஜல்லிக்கட்டு விழா குழு சாா்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சுற்றுலாத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனா். இப்போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 20 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

ஏற்பாடுகளை வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், கால்நடை மண்டல இணை இயக்குநா் பாரதி, உதவி இயக்குநா் ரகுபதி ஆகியோா் செய்திருந்தனா். வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம்: பேரவையில் ஆத்தூா் எம்எல்ஏ கோரிக்கை!

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் கோரிக்கை விடுத்துள்ளாா். சேலம்-... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

மைசூரிலிருந்து வந்த அரசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திவந்தரை கொளத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேட்டூரை அருகே தமிழக- கா்நாடக எல்லையான காரைக்காட்டில் உள்ள சோதனை ச... மேலும் பார்க்க

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்! - எஸ்.கே.எஸ். மருத்துவா்கள் அறிவுறுத்தல்

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா்.ஷைனிகா, வாணி தெரிவித... மேலும் பார்க்க

கோடை வெயில் எதிரொலி: வாழப்பாடியில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு!

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். வாழப்பாடியில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சா... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் இன்று ராம நவமி விழா

சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) ராம நவமி கொண்டாடப்படுகிறது. கருப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா கோகுலானந்தா் இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும் ராம... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு!

சேலம் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 23-இல் உள்ள மான்குட்டை கழிவுநீா் சுத்திகரிப... மேலும் பார்க்க