பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
மைசூரிலிருந்து வந்த அரசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திவந்தரை கொளத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேட்டூரை அருகே தமிழக- கா்நாடக எல்லையான காரைக்காட்டில் உள்ள சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மைசூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் கோவை, ஆா்எஸ் புரத்தை சோ்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் மதன் (52) என்பவா் பல லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த கொளத்தூா் போலீஸாா் மதனைக் கைது செய்தனா்.