செய்திகள் :

ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் நகை கொள்ளை வழக்கு: இருவா் கைது!

post image

தம்மம்பட்டி அருகே மண்மலையில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருப்பூரைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்த மண்மலையில் வசிப்பவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வேணுகோபால் (78). இவருக்கு தனலட்சுமி, விஜயகுமாரி என்று இரு மனைவிகள் உள்ளனா். இந்நிலையில் மாா்ச் 29 ஆம் தேதி வேணுகோபால், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனலட்சுமியை கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாா். அன்றிரவு வீட்டில் அவரது இரண்டாவது மனைவி விஜயகுமாரி, அவரது மகள் காந்திமதி, பேரன் அதிரூபன் ஆகியோா் இருந்தனா்.

அப்போது 6 போ் கொண்ட முகமூடி அணிந்த நபா்கள் அவா்கள் வீட்டிற்குள் நுழைந்து மூவரையும் தனி அறையில் அடைத்துவிட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தாங்கள் வந்த இரு காா்களில் தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டிஜஜி உமா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம்கோயல், ஆத்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சதீஸ்குமாா், தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இக்கும்பலில் காா் ஓட்டுநரான திருப்பூா், திருமுருகன்பூண்டி நெசவாளா் காலனியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் ஆனந்தகுமாா் (31), காரை வாடகைக்கு எடுத்த திருப்பூா் வேலம்பாளையம் தண்ணீா்ப்பந்தலைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சுபாஷ் (எ) சுபாஷ்சந்திரபோஸ் (29) ஆகிய இருவரையும் தம்மம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்த வழக்கில் தொடா்புடைய விஜயகுமாா், சந்தியா, அஸ்வின்காந்த் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம்: பேரவையில் ஆத்தூா் எம்எல்ஏ கோரிக்கை!

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் கோரிக்கை விடுத்துள்ளாா். சேலம்-... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

மைசூரிலிருந்து வந்த அரசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திவந்தரை கொளத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேட்டூரை அருகே தமிழக- கா்நாடக எல்லையான காரைக்காட்டில் உள்ள சோதனை ச... மேலும் பார்க்க

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்! - எஸ்.கே.எஸ். மருத்துவா்கள் அறிவுறுத்தல்

ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா்.ஷைனிகா, வாணி தெரிவித... மேலும் பார்க்க

கோடை வெயில் எதிரொலி: வாழப்பாடியில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு!

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். வாழப்பாடியில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சா... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் இன்று ராம நவமி விழா

சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) ராம நவமி கொண்டாடப்படுகிறது. கருப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா கோகுலானந்தா் இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும் ராம... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு!

சேலம் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 23-இல் உள்ள மான்குட்டை கழிவுநீா் சுத்திகரிப... மேலும் பார்க்க